பாஜகவுக்கு 400 … வைரலாகும் கார்கே பேச்சு !
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பார்லி மென்ட்டின் இரு சபைகளிலும் நேற்று முன்தினம் தொடங்கியது.
ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தி விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆளும் பாஜகவை விமர்சித்து பேசும்போது ஒரு கட்டத்தில், ‘உங்களுக்கு லோக்சபாவில் 330 முதல் 334 எம்பிக்கள் வரை இருக்கின்றனர். இதனால், நீங்கள் சபையில் மெஜாரிட்டியுடன் இருக்கிறீர்கள். அடுத்தமுறை அது 400 வரை இருக்கும்…’ என்று பேச, அப்போது சபையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜ எம்பிக்கள் சிரித்தனர். அப்போது சபையில் இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறுக்கிட்டு, ’கார்கே ஜி இப்போது உண்மையை பேசியிருக்கிறார்’ என்றார்.
இதைக் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட கார்கே, ’வரும் தேர்தலில் ஐஎன்டிஐஏ வெற்றி உறுதியாக உள்ளது. பாஜக 100 இடங்களை தாண்டாது’ என்றார்.இதையடுத்து பியூஷ் கோயல் எழுந்து, ’ஒவ்வொரு நாளும், ஐஎன்டிஐ கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக் கின்றனர். ஐஎன்டிஐஏ என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை’ என்றார்.
இதற்கிடையில், அடுத்த முறை 400 வரை இருக்கும் என்ற கார்கேவின் பேச்சு அடங்கிய வீடியோவை, ’எங்களுக்கு புதிய வெறுப்பாளர்கள் தேவை. பழையவர்கள் ரசிகர்களாகிவிட்டனர்’ என்ற வாசகத்துடன், பாஜக அதன் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.