சிறுத்தைகளுக்கு இல்லையா சிதம்பரம் !
சென்னை அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் சிதம்பரம், மயிலாடுதுறை நிர்வாகிகள் நேற்று கலந்துகொண்டனர். தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
சிதம்பரம் தொகுதியில் திமுக போட்டியிட்டு பல ஆண்டுகள் ஆகிறது. எனவே, திமுக போட்டியிட்டால் நன்றாக இருக்கும். ஆனாலும், தலைமை யாரை நிறுத் தினாலும் அவர்களுக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனராம்.
மயிலாடுதுறை காங்கிரஸ் விருப்ப தொகுதியாக கேட்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிக்கு அந்த தொகுதியை வழங்கக்கூடாது. திமுக தான் போட்டியிட வேண் டும் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை அந்ததந்த கட்சிகளுக்கு ஒதுக்குவதே இதுவரை நடைமுறையாக இருந்து வரும் நிலையில், காங்கிரஸ் 13 மதிமுக 2 கம்யூனிஸ்டுகள் தலா இரண்டு என ஆளாளுக்கு பேரத்தை உயர்த்தி வருகின்றன. அதேபோல கொடுக்கும் தொகுதியையும் பெற தயாராக இல்லை ஏனெனில் இந்த மடம் இல்லாவிட்டால் சந்த மடம் என்பதுபோல அதிமுக வேறு இருக்கிறது ஆகவே பேரம் களைகட்ட ஆரம்பித்து விட்டது. நிருபரின் கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த திருமாவளவன் அது என் சொந்த தொகுதி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.