கந்தனுக்கு வேல் வேல்… கடம்பனுக்கு வேல் வேல் !
அறுபடை என்றால் வழிகாட்டுதலுக்கு ஆற்றுப்படை என்று பெயர். சங்கப்புலவர் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை, திருமுருகன் அருள் பெறுவதற்கான வழிகாட்டுதல் நூலாக இருக்கிறது. அதில், முருகனின் அறுபடை வீடுகள் பற்றி போற்றப்படுகின்றன.
தேவேந்திரன் மகள் தெய்வயானையைத் திருமணம் செய்த திருப்பரங்குன்றம், சூரபத்மனை அழித்து உலகைக் காத்த திருச்செந்துார், தவம் இயற்றிய பழநி, தந்தை சிவனுக்கு பிரணவ மந்திர விளக்கம் உரைத்த சுவாமிமலை, வள்ளியைத்திருமணம் செய்த திருத்தணி, வள்ளி தெய்வானை யுடன் திருக்காட்சியருளும் பழமுதிர்சோலை ஆகிய ஆறு திருத் தலங்களே முருகனின் அறுபடை வீடுகள் என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலம் அனைத்து பெரிய திருக்கோவில்களிலும் முருகனுக்கு தனியா சன்னதி இருப்பதை பார்த்திருப்பீர்கள், ஆனால் கோவிலே ஒன்று தனியாக அமைந்திருக்கிறது தெரியுமா? ஆம் வயலூர் முருகன் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் குமாரவயலூர் என்ற ஊரில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சிவன், பார்வதி மகனான முருகப்பெருமானுக்கான ஒரு கோயிலாகும், ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. கருவறையின் முதன்மை தெய்வம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் கோயிலாக புகழ்பெற்றுள்ளது.
இக்கோயில் கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் விளங்குகிறது. பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ள இக்கோயில் உய்யகொண்டான் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. கோயில் இரு திருச்சுற்றுகளைக் கொண்டுள்ளது. மூலவரான சிவன் சந்நிதிக்கு பின்புறம் உள்ள முருகப் பெருமான் கோயிலின் முக்கிய தெய்வமாக கருதப்படுகிறார். இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தம் சக்தி தீர்த்த குளம் என்றும் அழைக்கப்படுகிறது.
தொன்மத்தின் படி, முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் இந்த குளத்தை உருவாக்கினார் எனப்படுகிறது. இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த இத்திருக்கோவிலில் இன்று தைப்பூசம் என்பதால் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கோவிலில் வந்து தரிசித்து செல்கிறார்கள்.