என் மண் என் மக்கள்’ யாத்திரை திருவிடைமருதூரில் இன்று மீண்டும் தொடக்கம்…
என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி விமானநிலையம் வந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசியதாவது…கே.பி முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும் அவர் கட்சியில் வகிக்க கூடிய பொறுப்புக்கும் வார்த்தைக்கும் சம்மதம் இல்லை.கே.பி முனுசாமிக்கு அண்ணாமலை மீது தான் வன்மம் அதுவும் அவருடைய தொகுதிக்கு சென்று வந்த பின்பு வன்மம் அதிகமாகி விட்டது. அதிமுகவிற்கு ஒரே ஒரு எம்ஜிஆர் இருந்தது போல், காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு காமராஜர் இருந்தது போல் பாஜகவிற்கு ஒரே ஒரு மோடி தான். அண்ணாமலையை போல் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஆனால் மோடியை போல் இன்னொருவரை உருவாக்க முடியாது. அதை கே.பி.முனுசாமி புரிந்து கொண்டு பேச வேண்டும்.
என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் மீது வன்மம் தான் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டே கட்சி தான் இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். நாங்கள் அவர்கள் இருவருமே தோல்வி அடைந்தவர்கள் என்பதை கூறி வருகிறோம். தி.மு.க, அ.தி.மு.க விற்கு இடையே யார் பெரியவர்கள் என்கிற பங்காளி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மீது கோபம் இருக்கிறது என்பதை விட அண்ணாமலை மீது தனிப்பட்ட வன்மம் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி எங்களுடையது. அந்த கூட்டணியை உருவாக்கியது நாங்கள் தான். இந்த கூட்டணியில் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்.
தி.மு.க இளைஞரணி மாநாட்டில் தங்கை கொடியேற்ற அண்ணன் மகிழ அண்ணன் மகன் துதி பாட மட்டன் பிரியாணியுடன் இனிதாக நடந்து முடிந்துள்ளது. அந்த மாநாடு நமத்து போன மிக்க்ஷர் தான்.திமுக இளைஞரணி மாநாட்டில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1980களில் கல்வியை பொதுப்பட்டிகளுக்கு கொண்டு சென்றது யார் அதன் பின்பு காங்கிரஸோடு பலமுறை திமுக காங்கிரஸ் ரோடு கூட்டணி வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்கக்கூடாது என 1996ல் அன்பழகன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். இளைஞர் அணி மாநாட்டில் நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் நீட்டிற்கு எதிராக திமுகவினர் வாங்கிய கையெழுத்து அட்டைகள் அங்குள்ள குப்பைகளில் நிரம்பி இருந்தது. திமுக தொண்டர் உடைய குழந்தை நீட் மூலமாகத்தான் அரசு மருத்துவராக முடியும் என்பதை திமுக தொண்டர்கள் உணர்ந்துள்ளார்கள். அந்த மாநாட்டிற்கு மாநில உரிமை மீட்பு மாநாடு என பெயர் வைத்துள்ளார்கள். மாநிலத்தை திமுகவிடமிருந்து மீட்பது தான் பாஜகவின் கொள்கையாக உள்ளது.சமூக நீதியை பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு லாயக்கு இல்லை என்றால் அது திமுகவிற்கு தான். இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தயாராகி விட்டார்கள் இனி ஒற்றைக் கட்சி பாஜக தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டார்கள். உதயநிதி ஸ்டாலின் கூறுவது போல் கூட்டணி கட்சி ஆட்சி அமைந்தால் ஊழல் ஊற்றெடுக்கும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போகிறது என்கிற அச்சத்தின் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் 2014 மற்றும் 2019 ஆண்டு தேர்தல் குறித்து பேசி உள்ளார். 2014ம் ஆண்டு தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றார்.