ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம் விண்ணை பிளக்கும் ரெங்கா ரெங்கா கோஷம் !!
108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமாதாகவும் முதன்மையானதாகவும் கருதப்படு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவின் 7ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் உபயநாச்கண்டருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (24ம் தேதி) காலை நடைபெறுகிறது.
இதற்கென அலங்கரிக் கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர் கள் செய்து வருகின்றனர்.
கடந்த 20ம் தேதி பாரதப்பிரதமர் வருகை தந்து தரிசித்த நிலையில் நடக்கவிருக்கும் முதலாவது தேரோட்டம் இது என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.