அயோத்தி ராமர் கோவில் : அதிரப்போகும் பங்குகள்..!

0

உத்திரப் பிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் ராமர் கோயிலுக்கு வருவார்கள் என்பதால் அயோத்தி மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா தளமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தினமும் 3 லட்சம் பக்தர்கள் அயோத்திக்கு வரக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே அயோத்தியை மையமாக கொண்ட விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலாத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டும் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அயோத்தியை மையமாக கொண்ட சுற்றுலாத்துறையை சேர்ந்த நிறுவன பங்குகளை பரிசீலனை செய்யலாம் என்கிறார்கள். அயோத்தி சுற்றுலா தளமாக வளர்ச்சி கண்டால் பலன் அடையும் சில நிறுவன பங்குகளையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

1. பிரவேக் : குஜராத்தை சேர்ந்த பிரவேக் லிமிடெட் நிறுவனம் கண்காட்சி மேலாண்மை, நிகழ்ச்சி மேலாண்மை, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மற்றும் வெளியீடு போன்ற பல்வேறு வணிகபிரிவுகளில் வலுவான வர்த்தகத்தை கொண்டுள்ளது. அயோத்தி, ரான் ஆஃப் கட்ச், வாரணாசி, டாமன் அண்ட் டையூ மற்றும் சர்தார் சரோவா உள்ளிட்ட பல இடங்களில் சொகுசு கூடார நகரங்கள் மற்றும் சொகுசு ஓய்வு விடுதிகளை கட்டி வழங்கிவருகிறது. இந்த ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

2. இந்தியன் ஹோட்டல்ஸ் : அயோத்தியில் பட்ஜெட் முதல் நட்சத்திர வகை வரையிலான அனைத்து ஹோட்டல் இடங்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இந்தியன் ஹோட்டல் நிறுவனம் ஏற்கனவே இங்கு இரண்டு சொத்துக்களை கொண்டுள்ளது.

3. தாஜ் ஜிவிகே ஹோட்டல்ஸ் : ஹைதராபாத்தை சேர்ந்த ஜிவிகே குழுமம் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு வர்த்தக நிறுவனம் தாஜ் ஜிவிகே ஹோட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ் தொழிலில் பிரகாசித்து வருகிறது.

4. இன்டர்குளோப் ஏவியேஷன் : விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ) கடந்த மாதம் இறுதியில் டெல்லியில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை தொடங்கியது. இந்த ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கு 3 சதவீதமும், கடந்த ஓராண்டில் இப்பங்கு விலை 46 சதவீதம் உயர்ந்துள்ளது.

logo right

5. ஸ்பைஸ்ஜெட் : மற்றொரு விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அயோத்திக்கு சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது. இந்நிறுவன பங்குகள் கடந்த 6 மாதத்தில் முதலீட்டாளர்களுக்கு 111 சதவீதம் ஆதாயம் அளித்து மல்டிபேக்கர் பங்காக விளங்குகிறது.

6. ஐஆர்சிடிசி : ராமர் கோவில் திறப்பு விழாவின் முதல் 100 நாட்களில், ஜனவரி 19 (கடந்த வெள்ளிக்கிழமை) முதல் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அயோத்திக்கு 1,000 ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) பங்கு விலை இந்த ஆண்டில் இதுவரை சுமார் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 18ம் தேதி வரையிலான ஓராண்டில் இப்பங்கு விலை 45 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

7. ஈஸிமை டிரிப் : அயோத்தி பயணங்களுக்காக ரயில், ஹோட்டல்கள்,விமானங்கள் முன்பதிவு போன்றவற்றுக்கு ஈஸிமை டிரிப், தாமஸ் குக் மற்றும் யாத்ரா ஆன்லைன் போன்ற ஆன்லைன் பயண இணையதளங்களுக்கு பெரும் தேவை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆகவே இப்பங்குகளில் கூடுதல் கவனம் செலுத்தலாம் அதேபோல

அப்பல்லோ சிந்தூரி ஹோட்டல்ஸ் நிறுவனம் மருத்துவமனைகள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களில் உணவு விற்பனை நிலையங்களை நிர்வகிக்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் அயோத்தியில் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் மல்டி லெவல்பார்க்கிங் வசதியை கொண்டுள்ளது. இதில் உணவகங்களுக்கான ரூப் டாப் பகுதியும் அடங்கும். ஒரே நேரத்தில் 1,000 பக்தர்கள் தங்கும் திறன் கொண்டது. இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கின் விலை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 84 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது ஆகவே மேற்கண்ட பங்குகளில் உங்கள் கண்ணை பதிக்க சொல்கிறார்கள் நிபுணர்கள்.

Disclimer : மேலே உள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது தரகு நிறுவனங்களின் கருத்துக்களே முதலீட்டாளர்கள் உங்கள் ஆலோசகரை ஆலோசிக்கவும்.

Leave A Reply

Your email address will not be published.