உண்மை என்ன யார் சொல்வார் ?
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று, தெற்கு கோல்கத்தாவில் உள்ள பாலகஞ்ச் மாவட்டத் தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன்பின் வீட்டுக்கு திரும்பிய அவர், கால் தவறி விழுந்தார். இதில் அவரது நெற்றியிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டிய நிலையில், மம்தா பானர்ஜியை, அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி, கோல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், மம்தாவின் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிந்தது நெற்றியில் ஏற்பட்டுள்ள காயத்துக்கும், எலும்பு முறிவுக்கும் டாக்டர்கள் சிகிச்சை யளித்து வருகின்றனர்.
இதுபற்றி எக்ஸ் சமூக வலைதளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்ட பதிவில் நமது தலைவர் மம்தா பானர்ஜி காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம்’ என கூறியுள்ளது. தேர்தல் வந்தாலே இப்படி எதையாவதை கிளப்பி விடுவது வாடிக்கைதான் என சிலர் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.