அருள் புரிவாயே அங்காளபரமேஸ்வரி அம்மாவே !
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் நிகழ்ச்சியின் முன்பாக அம்மன் அலங்காரத்துடன் வீதி உலா வருதல், அம்மன் வேடமணிந்து மயான கொள்ளை, வள்ளான கண்டி சம்ஹாரம் அம்மன் அலங்காரத்துடன் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று. பின்பு பொதுமக்கள் வேண்டுதல் வைத்து பொங்கல் வைத்தல் மாலை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் முக்கிய மாடவீதிகளில் தேர் ரத உற்சவம் நடைபெற்றது. இதில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குடும்ப பிரச்சினை, தொழில் உள்ளிட்டவர்கள் வேண்டுதல் வைத்து வடம் பிடித்து தேர் இழுத்தால் நினைத்தது நிறைவேறும் என்பதால். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தனர்.