டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 9,000 கோடி மதிப்பில் ஆலையை அமைக்கிறது…

0

ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ரூபாய் 9,000 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை நிறுவவும், 5,000 வேலை வாய்ப்புகளை (நேரடி மற்றும் மறைமுகமாக) உருவாக்கவும் தமிழக அரசுடன் மார்ச் 13ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரிகள் சென்னையில் கலந்து கொண்டனர். டாடா மோட்டார்ஸ் குழுமத்துடனான ஒப்பந்தம், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் (வேலூர் அருகே) அமைக்கத் திட்டமிடப்பட்ட உற்பத்தி ஆலை ரூபாய் 9,000 கோடி முதலீட்டை உள்ளடக்கியது மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo right

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று தமிழக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, 2030ம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இலக்கை அடைய உறுதிபூண்டுள்ளது. தமிழக அரசின் தொழில் துறையானது, அதிக மதிப்பு, மூலதனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்திற்கு தொழில்கள் நிறைய வருவதை அது உறுதிபடுத்துகிறது.

தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில், ‘புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, டாடா மோட்டார்ஸ் அதிநவீன வாகன உற்பத்தி நிலையத்தை நிறுவி, 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்து, 5,000 பேர் வரை வேலை வாய்ப்புகளை உருவாக்கும்’ என்றார். கார்கள், லாரிகள் மற்றும் பேருந்துகளை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ், புதிய ஆலையில் எந்தெந்த வாகனங்களைத் தயாரிக்கும் என்று குறிப்பிடவில்லை. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிக்கான நோடல் ஏஜென்சியான வழிகாட்டி குழுக்கள் மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமம் இந்த வாய்ப்பை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றிணைந்து செயல்படும்’ என்று டாடா மோட்டார்ஸ் பங்குச் சந்தைகு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை மறைமலை நகர் அருகே செயல்பட்டு வந்த ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியதாக செய்தி வெளியானது ஆனால் அது இன்றுவரை என்ன ஆனது என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இந்த செய்தியாவது இனிப்பை வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.