கருப்பையாவிற்காக களமிறங்கிய நடிகை கெளதமி !

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை கௌதமி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக வேட்பாளருக்கும் அவர் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திற்கு திருச்சியில் அமோக வரவேற்பும் உள்ளது, திருச்சியில் நான்கு முனை போட்டியாக இருந்தாலும் எதிரணி வேட்பாளரால் சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. யராக இருந்தாலும் மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் பற்றுடன் செயல்பட வேண்டும்.

 

logo right


எதிரணியில் இருக்கும் வேட்பாளர் துரை வைகோ நான் விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை என்றும் கட்டாயத்தின் பேரில் வந்தது போலவும் தேர்தலில் போட்டியிடுகிறார். மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தந்தை மீது இருக்கும் பாசத்தை பாராட்டுகிறேன்.
ஆனால் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் வேட்பாளராக இருப்பவர் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதியோடு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவும் அநியாயமாகவும் இருக்கும். தேர்தல் அறிவிப்பு காலகட்டத்தில் தான் பிரதமரை, பாஜக தலைவர்களையும் தமிழகத்தில் அடிக்கடி பார்க்க முடிகிறது . கடந்த பத்து ஆண்டுகளில் இது போல் அடிக்கடி அவர்களை தமிழகத்தில் பார்க்க முடிந்ததில்லை.பெரிய கூட்டணி என்று எதை வைத்து தீர்மானிக்க முடியும் மிகப்பெரிய கூட்டணி என்பது மக்களோடதாக இருக்க வேண்டும்.அத்தகைய மகத்தான கூட்டணி மக்களுடனான கூட்டணி பழனிச்சாமியின் அ.தி.மு.க. கூட்டணி தான்.தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மக்கள் பணி செய்யக் கூடிய தகுதியான வேட்பாளரை தேர்வு செய்து போட்டியிட வைத்துள்ளனர் . என அவர் தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.