Citizen Amendment Act என்றால் என்ன ? வழக்கறிஞர் சொல்வது என்ன !

0

15.8.1947க்கு முன் இந்தியாவில் பிறந்து பிரிவினை காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்காளதேஷ்…உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ( அந்தந்த நாடுகளில் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள்) நபர்கள் அவர்களது வாரிசுகள் இந்தியா வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதாவது அந்தந்த நாடுகளில் மத சிறுபான்மையினர் என்பதை கவனிக்கப்பட வேண்டும்.

logo right

சிறுபான்மை என்றாலே இஸ்லாமியர்கள் என்ற நினைப்பு மட்டுமே நம் ஆழ்மனதில் நீக்கமற நிறைந்ததே அதற்கு காரணம் அதனை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

மேலே உள்ள நிபந்தனையுடன், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நேபாளத்தில் இருந்து ஒரு இந்து வந்தால் குடியுரிமை கிடையாது. அதுவே அங்கிருந்து ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ பார்சியோ, ஜெயினோ, புத்தமதத்தவரோ, வந்தால் குடியுரிமை கிடைக்கும்.அதேபோல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்காதேஷில் இருந்து ஒரு இஸ்லாமிய அகதி வந்தால் குடியுரிமை கிடையாது. அங்கிருந்து பிற மதத்தவர்கள் வந்தால் குடியுரிமை கிடைக்கும்.இவ்வளவு தான் சாராம்சம். ஆனால் இந்த சட்டத்தை மக்களை அறியவிடாமல் ஏதோ இங்கே இருக்கும் இஸ்லாமியர்களை சிறையில் அடைத்துவிட போவதாக வதந்தி பரப்பி அவர்களை வாக்குவங்கிகளாகவே வைத்திருக்க முயலும் சக்திகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் வழக்குரைஞர் கேசவன்.

Leave A Reply

Your email address will not be published.