திமுக பண்படுத்துகிறது பாஜக புண்படுத்துகிறது ஸ்டாலின் பேச்சு…

திருவண்ணாமலை, ஆரணி ஆகிய மக்களவை தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோ.காட்டுகுளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசினார். கூட்டத்தில் பேசிய அவர்…இந்த மக்களவை தேர்தல் களம் இரண்டாவது சுதந்திர போர் களம் , இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வதிகார ஆட்சிக்கும் நடைபெரும் தேர்தல் ,மக்களின் வெறுப்பு ஆட்சி அகற்றி நல்லாட்சி அமைய உள்ள தேர்தலாகும் என்றார். தமிழ்நாட்டில் மனசாட்சிப்படிதான் ஆட்சி நடைபெறுகிறது அதேபோன்று இந்தியாவிலும் இந்ததேர்தல் மூலம் சிறப்பாகன ஆட்சி அமைய வேண்டும்.

logo right

மத்திய அரசு தோல்வி பயத்தால் பொய் சொல்லிவருகிறார் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ துறைகளை பயன்படுத்தி தற்போது ஆர்.டி.ஐ பயன்படுத்துகிறார்கள். திமுக ஆட்சி மக்களை பன்படுத்துகிறது ஆனால் மத்திய பாஜக ஆட்சி மக்களை பிளவு படுத்துகிறது என்றார். மக்களவை தேர்தலில் எந்த தெளிவும் இல்லாமல் அதிமுக போட்டியிடுகிறார்கள் அவர்கள் அமைத்துள்ளது துரோக கூட்டடணியாகும் என்றார். இக்கூட்டத்தில் மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு..பிச்சாண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.