உதறிவிட்ட உயர்நீதிமன்றம் சுயேட்சையாக துரை வைகோ !

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது உயர்நீதிமன்றம், குறைவான வாக்குகள் பெற்றதால் கடந்த 2010 முதல் மதிமுக தேர்தல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சின்னத்தை கேட்க குறைந்தது இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் மதிமுக போட்டியிட வேண்டும்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் சின்னம் கேட்க உரிமை உள்ளது.வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேரம் முடிந்துவிட்டதால் இனி திருச்சியில் திமுக கூட்டணி சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்றே கருதவேண்டிய நிலை, அமமுக சார்பாக செந்தில் நாதன், அதிமுக சார்பாக கருப்பையா நாம் தமிழர் கட்சி சார்பாக ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் மட்டுமே போட்டியிடவும் மேலும் சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு போட்டியிட மட்டுமே வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது துரை வைகோவும் சுயேட்சை வேட்பாளராகவே கருதப்படுவார் அவர் தீப்பெட்டி அல்லது சிலிண்டெர் சின்னம் கேட்டுள்ளார் அவற்றில் ஒன்றை தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், திருச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ம.தி.மு.க., வேட்பாளர் துரை, திருச்சியில்,  செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கடந்த காலங்களை போல், இப்போது இல்லை. வேட்பாளரையும், சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு, ஓட்டு போடும் அளவுக்கு மக்கள் தெளிவாக உள்ளனர். அனைவரின் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால், 24 மணி நேரத்தில், சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.

logo right

மதவாத பா.ஜ.,கட்சியை எதிர்க்கும் உண்மையான அணியாக தி.மு.க., கூட்டணியை மக்கள் பார்க்கின்றனர். எனவே, அந்த கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளரையும், அவரது சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு ஓட்டளிப்பார்கள். இதனால், சின்னத்தை பொருத்தவரை எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றார்

ஆக திருச்சி திமுக தொண்டர்கள் அனைவரும் பெரம்பலூருக்கு சென்று தங்கள் பணியினை தொடர்வார்கள் அருண் நேருவிற்கு உச்சநீதி மன்ற தீர்ப்பால் அதிர்ஷ்டம் அடித்திகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.