நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி காலமானார்…

தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொண்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 24) அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை (குருணை) சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

logo right


இது ம.தி,மு.க, நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திமுகவில் இருந்து பிரிந்து வந்து மதிமுக என்னும் கழகத்தை வைகோ தொடங்கிய பொழுது ஒன்பது மாவட்டச்செயலாளார்கள் அவருடன் வந்தனர் அவருடன் வந்தவர்களில் கடைசியாக இன்று மதிமுகவை விட்டு சென்றுவிட்டார்.
மதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம் ஆரம்பத்தில் மூன்று சீட் கேட்டதாகவும் அதில் ஒன்று கணேசமூர்த்திக்கு மற்றொன்று துரை வைகோவுக்கு என்றும் மற்றொன்று செந்திலதிபனுக்கும் என்றும் கூறப்பட்டது இருப்பினும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்தமும் விதிக்கப்பட்டதுடன் ஒரே ஒரு தொகுதிதான் என ஆணித்தரமாக அடித்துச்சொல்லப்பட்டதாகவும் அதனால் மனமுடைந்தவர் மருந்தினை குடித்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள் எது எப்படியோ கடைசியாக கொள்கை பிடிப்போடு இருந்து ஒருவரும் கட்சிதாவாமல் நிரந்தரமாக விடை பெற்றிருக்கிறார் மதிமுகவை விட்டு விதுரனின் கண்ணீர் அஞ்சலி

Comments are closed, but trackbacks and pingbacks are open.