சின்னம் ஆணையத்திடம் அமைச்சர் ஓய்வில் சபாஷ்…

தேர்தல் ஆணையம் தான் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளது. இன்று பிற்பகல் நீதிமன்றம் விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே, தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும் லாக் செய்து வைக்கப்பட்டுள்ள சின்னத்தை ரிலீஸ் செய்து மதிமுகவுக்கு வழங்குவதில் சிக்கல் உள்ளது.

logo right

இது முன் உதாரணமாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. தேர்தல் விதிமுறைகள் படி சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால் அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்க உள்ளார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கிறோம்.
கடந்த காலங்களை போல் இப்போது இல்லை. வேட்பாளரையும் சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு ஓட்டு போடும் அளவிற்கு மக்கள் தெளிவாக உள்ளனர். அனைவரின் கைகளிலும் மொபைல் போன் உள்ளது, எனவே 24 மணி நேரத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் இது தவிர, மதவாத பாஜகவை எதிர்க்கும் தனியாக திமுக அணியை மக்கள் பார்க்கின்றனர். எனவே அந்த கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவையும் அதன் சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு ஓட்டளிப்பார்கள்.

 


உங்கள் ஆணையம் புதிது புதிதாக காரணங்களை சொல்லி சின்னம் ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுகின்றனர். எங்களுக்கு மட்டுமல்ல நாம் தமிழர் கட்சியினருக்கும் இதே நிலைதான். என்று அவர் தெரிவித்தார்.
அவருடைய பேட்டியில் இருந்து திட்டவட்டமாக உதய சூரியன் சின்னத்தில் நிற்க மாட்டார் என்கிறார்கள் அப்படி இருக்கையில் மாற்று வேட்பாளராக மனு செய்திருக்கும் செந்திலதிபன் வேட்புமனு செய்ய வாய்ப்பு இருக்கிறது, இந்நிலையில் மலைக்கோட்டை மாமன்னர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார் அரசியல் திருப்புமுனை ஏற்படுமா சுயேட்சை சின்னம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்திருந்தான் பார்க்க வேண்டும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.