பொய்யர்களுக்கு பதில் சொல்ல களமிறங்குகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
தமிழகத்தில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்ய 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் டில்லியில் இருந்து விமானத்தில் பெங்களூர் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி வருகிறார். காலை 10 மணிக்கு, அங்கு பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டரில் சிதம்பரம் செல்கிறார். மதியம் கிருஷ்ணகிரி, தஞ்சையில் பிரச்சாரம் செய்யும் அமைச்சர், மாலை 4 மணிக்கு தஞ்சை பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார். அதன் பிறகு ஹெலிகாப்டரில் கோவை செல்கிறார். அங்குள்ள ரேடிசன் புளு ஓட்டலில் இரவு தங்குகிறார். மீண்டும் நாளை நிர்மலா சீதாராமன் 12.35 மணிக்கு சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதை முடித்துக்கொண்டு, தஞ்சாவூரில் இருந்து காரில் புறப்பட்டு அவினாசி செல்கிறார். அங்கு காலை 10.30 மணிக்கு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கி றார். மாலை 4 மணிக்கு கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் நடக்கும் ரோடு ஷோவில் 10 ஆயிரம் பெண்களுடன் பங்கேற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு தொண்டாமுத்துாரில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து, பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கி றார். அதையடுத்து 2 நாள் சூறாவளி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, இரவு 9.15 மணிக்கு விமானத்தில் டில்லி செல்கிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.