பழனி பங்குனி தேரோட்டம் பக்தர்கள் பரவசம் !

பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவிலில்  பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துகுமாரசுவாமி ,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணமும்,  திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்றும் நடைபெற்றது. நேற்று மாலை நான்கு மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட  திருத்தேரில் பழனி அடிவாரம் வடக்குகிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக‌ தேரில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

logo right

தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் தலைவர் சந்திரமோகன் ,அறங்காவலர் குழுவினர், கோட்டாட்சியர் சரவணன், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகின்ற 27ம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.