Paytm Fastag : இன்றோடு கதம் கதம் முக்கியமான செய்தி !
Paytm Payments Bank மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, Paytm Fastag பயனர்கள் தங்கள் Fastag ஐ இன்றோடு மார்ச் 15க்குப் பிறகு ரீசார்ஜ் செய்ய முடியாது. Paytm Fastag பயனர்கள் தங்கள் Fastag ஐ மார்ச் 15, 2024 க்கு முன் வேறு எந்த வங்கியிலிருந்தும் வாங்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது சுங்கச்சாவடியில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும். இதைச்செய்யாவிட்டால், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது பயனர்கள் அபராதம் அல்லது இரட்டிப்புக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
Paytm Payments Bank மீது RBI நடவடிக்கை Paytm பேமென்ட் வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க, Paytm Fastag பயனர்கள் மார்ச் 15, 2024க்குப் பிறகு பேலன்ஸை ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது. இருப்பினும், பயனர்கள் தங்கள் தற்போதைய இருப்பைப் பயன்படுத்தி டோல் கட்டணத்தை பணமாக செலுத்தலாம்.
உங்கள் Fastag ஐ ரீசார்ஜ் செய்ய இந்த 39 வங்கிகளுக்கு நீங்கள் உங்கள் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, அலகாபாத் வங்கி, AU சிறு நிதி வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட், பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, மகாராஷ்டிரா வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், காஸ்மோஸ் வங்கி, டோம்பிவிலி நகரி சககாரி வங்கி, ஈக்விடாஸ் Small bank, பெடரல் வங்கி, ஃபினோ பேமெண்ட் வங்கி, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, ஐடிஎஃப்சி First வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, IndusInd வங்கி, ஜே & கே வங்கி, கர்நாடக வங்கி ஸ்ப்பா கண்ணை கட்டுதா இன்னும் இருக்கு இருங்க
கரூர் வைஸ்யா வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, LivQuik டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், நாக்பூர் நகரிக் சககாரி வங்கி லிமிடெட், பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சரஸ்வத் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஜல்கான் மக்கள் கூட்டுறவு. வங்கி, திருச்சூர் மாவட்ட கூட்டுறவு வங்கி, UCO வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கி இவற்றில் ஏந்த வங்கியை வேண்டுமானாலும் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம்.