ராகு காலம் தவிர்த்த ராகுல் காந்தி…!
வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ராகுல் காந்தி தனது சகோதரியும் கட்சி பொதுப்பாளருமான பிரியங்கா காந்தியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். மூப்பை நாடு தலைக்கல் கிரவுண்டில் ஹெலிகாப்டரில் இறங்கிய பின் இருவரும் அங்கிருந்து கல்பட்டா வரை சாலை வழிப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
1:30 மணிக்கு மேல் ராகு காலம் வருவதால் அதற்குள் வேட்பு மனுவை அளிக்க நினைத்த ராகுல் காந்தியும் சகோதரியும், சாலை வழி பிரச்சாரத்தை விரைவாக முடித்துவிட்டு வயநாடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து கலெக்டர் ரேணு ராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர். முன்னதாக ராகுலை எதிர்த்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆனி ராஜா, தேர்தல் அதிகாரியும் ஆட்சித் தலைவருமான ரேணு ராஜிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.