எம்.எல்.ஏ அலுவலகங்களுக்கு சீல் படங்கள் அகற்றம் !
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன, தேர்தலுக்காக திருச்சியில் பணியாற்ற உள்ள பறக்கும் படை உள்ளிட்ட வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மக்களவைத் தேர்தல் நடத்த திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை போதுமான அளவில் உள்ளது. பணப்பட்டுவாடா உங்களிடம் புகார்களை தெரிவிக்க 18005995669 என்கிற டோல் ஃப்ரீ எண்ணும், 6384001585 என்கிற வாட்ஸ் அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புகார் தெரிவித்தால் 100 நிமிடங்களுக்குள் ஆய்வு செய்து புகாருக்கான பதில் அறிக்கை அளிக்கப்படும், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன இதன் காரணமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் படங்கள் அகற்றப்பட்டன தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டது, பொது இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சி சார்பான போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றனர் மாநகராட்சி பணியாளர்கள்.