தேர்தல் திருவிழா வேட்புமனு தாக்கலுடன் தொடங்கியது…
தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் தேர்தலில் போட்டியிடுவதற்கு முறைப்படி, தான் வகித்து வந்த மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் முன்னிலையில், மேயர் அவர்களிடம் வழங்கினார். அதன்பின்னர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்மாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரதீப் குமாரிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் எம்.பி. ப.குமார், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் ஜெ.ஸ்ரீனிவாசன் இன்று முதல் தேர்தல் திருவிழா களைகட்டத்தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும் இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ பம்பரம் சின்னத்தைக்கோரி தொடர்ந்த வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.