ஒவ்வாமையால் தவிக்கும் ஊர் மக்கள்…
திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீராகரங்கள் மற்றும் தின்பண்டங்களை அருந்தியதால் வாந்தி மயக்கத்துடன் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் நேற்று முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள், வெள்ளரிக்காய் மாங்காய் கலந்து தின்பண்டங்களையும் பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை அருந்திய கிராமவாசிகள் பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருகிலுள்ள தாடிக்கொம்பு அரசு மருத்துவமனையில் வாந்தி மயக்கத்துடன் சிகிச்சைக்காக வந்த நிலையில், அங்கிருந்து சுமார் 10 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று அருந்திய நீராகரங்கள் மூலம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அங்கு மாவட்ட சுகாதாரதுறையினர் ஆய்வு செய்து வருகின்றனர், வரும் நாட்களில் ஆங்காங்கே திருவிழாக்காலமும் தேரோட்டமும் தொடங்கிவிடும் கிடைக்கிறதே என அனைத்தையும் வாங்கி உண்னாமல் உங்கள் உடலை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.