அனுமதி அளிக்குமா அரசு !

பழனி கிரிவலப் பாதையில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் கார் மற்றும் சொந்த வாகனத்தை  அனுமதிக்க அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதைக்கு வாகனங்கள் வரும் பாதையை கோயில் நிர்வாகம் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளது. இன்று அரவக்குறிச்சியில் இருந்து பழனிக்கு வந்த மாற்றுத்திறனாளி பக்தர் கிரிவலப் பாதைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

 

logo right

தடுப்புகளைத் தாண்டி மாற்றுத்திறனாளி பக்தரை உறவினர்கள் தூக்கிச் சென்று சக்கர நாற்காலியில் அமர வைத்தனர். தொடர்ந்து இதுபோன்று மாற்றுத்திறனாளிகள் கிரிவலைப் பாதைக்கு சிரமப்பட்டு வரக்கூடிய நிலை இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வரக்கூடிய வாகனங்களை கிரிவலப் பாதையில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிரிவலப்பாதையில் முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது போல மாற்றுத்திறனாளிகள் வரக்கூடிய வாகனங்களை ரோப் கார் நிலையம் மற்றும் வின்ச் நிலையம் வரையில் சென்று வர அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரைக்காசா இருந்தாலும் அரசாங்க காசா இருக்கணும்னு சம்பளம் வாங்குபவர்களை சொல்வதுண்டு இப்பொழுது மாற்றுத்திறனாளிகளும் அதேக்கோரிக்கைய வைக்கிறார்கள் முருகா உனக்கு ஏன் இந்த பாராபட்சம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.