அஸ்வின் அசத்துவாரா ரசிகர்கள் எதிர்பார்ப்பு !

0

இந்திய கிரிக்கெட் வீரர்களில் கவாஸ்கர், கும்ளே, கபில்தேவ், திலீப் வெங்சர்கர், டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ். லட்சுமண், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, விராட் கோலி, சித்தேஸ்வர் புஜாரா ஆகிய 13 பேர் மட்டுமே 100 டெஸ்ட்களுக்கு மேல் விளையா டியுள்ளனர்.

இப்பட்டியலில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இணைய உள்ளார். தர்மசாலாவில், வரும் 7ம் தேதி தொடங்கும், இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட், அஸ்வினின் 100வது டெஸ்டாக அமைய உள்ளது.

logo right

தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், தினேஷ் கார்திக், முரளி விஜய், சடகோபன் ரமேஷ் உள்ளிட்டோர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால், ஒருவர் கூட 100 டெஸ்ட்கள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மசாலா டெஸ்டில் அஸ்வின் விளையாடும் போது, 100 டெஸ்ட்கள் விளையாடிய முதல் தமிழக வீரர், 14வது இந்திய வீரர் என்ற சாதனனையை அஸ்வின் படைப்பார். மீண்டும் சுழலில் மிரட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது ரசிகர்கள் மத்தியில் !

Leave A Reply

Your email address will not be published.