தேர் கவிழ்ந்து விபத்து… பாலாற்றங்கரையில் சாமிக்கு படையலிட்டு தோஷ பரிகார பூஜை !

0

வேலூர் மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது மயான கொள்ளை திருவிழா இத்திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி வேலூர் மாநகர முக்கிய பகுதிகளான தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை, மக்கான், ஓல்டு டவுன் என பல பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வந்து அம்மன் ஆற்றில் இறங்கியது முன்னதாக தங்களின் நேர்த்திகடனை செலுத்தியது , பின்னர் விருதம்பட்டு, கழிஞ்சூர், வெண்மணிநகர் மோட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 60 அடி கொண்ட தேரானது பிரமாண்டமாக ஊர்வலமாக வந்து பாலாற்றங்கரையில் நின்றது.

logo right

அன்று இரவு வெண்மணி நகர் மோட்டூரில் 60 அடி உயரம் கொண்ட தேர் திடீரென சாய்ந்து விழுந்து தரைமட்டமானது இதில் தேர் விழும் திசையில் யாரும் இல்லாததால் ஒருவருக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டது இதில் எந்த ஒரு உயிர் சேதமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இச்சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து இன்று வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் காட்பாடி வெண்மணி நகர் மோட்டூரை பொதுமக்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கரகம் வைத்து பரிகார பூஜையில் நடைபெற்றது இதில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் படையல் இட்டு கூழ் வார்த்தனர், பின்னர் பம்பை மேளம் முழங்க சாமி வழிபாடு செய்த போது அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்கள் மீது இறங்கி தனக்கு நீங்கள் இட்டப்படையில் போதவில்லை என கூறியது இதனையடுத்த அப்பகுதி மக்கள் தாங்கள் இதற்கு மேல் அம்மனை சாந்தப்படுத்துகிறோம் எனக் கூறிய கோழி பலியிட்டு கற்பூரம் ஏற்றி தீபாரதனை செய்து அம்மனை சாந்து படுத்தி அதன் பிறகு கரகத்தை பம்பை மேளம் முழங்க வெண்மணி நகர் மோட்டோருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.