இ.டி.’ விசாரணைக்கும் பாஜக பெற்ற நன்கொடைக்கும் சம்பந்தம் இல்லை !

0

தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமலாக்க துறை விசாரணையில் சிக்கிய பல நிறு வனங்கள் அத்தகைய விசாரணைக்கு பின், பாஜகவுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, அவர்கூறியிருப்பதாவது… அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு தனியார் நிறுவனங்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுங்கட்சிக்கு நிதி அளித்தார்கள் என்பது ஒரு அனுமானம் மட்டுமே.

அவர்கள் பாஜகவுக்கு மட்டுமே நிதி அளித்தார்கள் என்று உங்களால் கூற முடியுமா ? அமலாக்க துறை விசாரணைக்கும், ஆளுங்கட்சி பெற்ற தேர்தல் நிதிக்கும், எந்தசம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சிகள் நிதி பெறக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

logo right

தனியார் நிறுவனங்கள் நிதி வழங்குவதற்கு தயாராக இருக்கும்போது, அதற்கேற்ற சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்து சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தேர்தல் நிதி தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்படும் பொழுது, கடந்த காலத்தில் கிடைத்த பாடங்களை கொண்டு வெளிப்படைத் தன்மையுடன் புதிய நடை முறைகளை உருவாக்க முடியும் இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். இந்நிலையில் ஒரே ஒரு மாநிலத்தில் ஆளும் திமுகவிற்கே 969 கோடி கொடுத்திருக்கிறார்கள் 18 மாநிலங்களையும் ஒரு நாட்டையே ஆளும் பாஜகவிற்கு 6060 கோடி கிடைத்திருப்பதில் எங்கே முறைகேடு நடந்திருக்கிறது என்பது புரியும் என்றிருக்கிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நேற்று செய்தியாளர்களிடம் ‘நாங்கள் முறைகேடு செய்ய மாட்டோம். முறைகேடு செய்ய யாரையும் நாங்கள் விடவும் மாட்டோம்’ என பிரதமர் கூறிவருகிறார். ஆனால், 5 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்களாக ரூபாய் 6 ஆயிரத்து 60 கோடியை பாஜக பெற்றுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் எடுத்த நடவ டிக்கையால் அம்பலமாகி விட்டது. இது கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில் 47 சதவீதம் ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு 11 சதவீத நன்கொடை மட்டுமே கிடைத்துள்ளது எனக்கூறியதோடு தேர்தல் செலவுக்கே பணமில்லை என கதறியிருக்கிறார் கார்கே.

Leave A Reply

Your email address will not be published.