உளறலின் உச்சம்… திண்டுக்கல் சீனிவாசன் !
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் அடுத்துள்ள என் ஜி ஓ காலனியில் 28.02.24 இரவு நடைபெற்றது. இதில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் அவர் பேசுகையில்… நான் அமைச்சர் ஆனவுடன் ஜெயலலிதாவிடம் வைத்த முதல் கோரிக்கை திண்டுக்கல்லுக்கு மருத்துவக் கல்லூரி வேண்டுமென கூறினேன் உடனடியாக மருத்துவ கல்லூரி வழங்குவதாக கூறினார் அதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார்
அதன் பின் முதலமைச்சராக வந்த எடப்பாடி பழனிச்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னிடம் எம்ஜிஆரை வாழ வைத்தது திண்டுக்கல், அண்ணா திமுக வாழவைத்தது திண்டுக்கல் ஆகையால் உடனடியாக திண்டுக்கல்லுக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார் ஆகையால் ஜெயலலிதாவின் வார்த்தைக்கு மதிப்பு அளித்து திண்டுக்கல்லிற்கு மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதி வழங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் என ஊளறினார். தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என சொல்வதற்கு பதிலாக மதுவிலக்கை ரத்து செய்வோம் என கூறினார். பஞ்சு மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன கலவையை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் எனக் கூறி தமிழக அரசு பஞ்சுமிட்டாய் விற்க தமிழகத்தில் தடை விதித்துள்ளது அது பாராட்டுக்குரிய விஷயமாகும்.
பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் குஷ்டம் வரும் என உளறிய சீனிவாசன் மீண்டும் சுதாரித்துக் கொண்டு பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் கேன்சர் வரும் என பேசினார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அழகிரி தற்பொழுது வெளியேறி உள்ளார் அவருக்கு பதிலாக செல்வப் பெருந்தகை வந்துள்ளார் அவர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அது நல்லபடியாக நடக்கட்டும் அதிமுகவான எங்களை நம்பி கூட்டணிக்கு வருபவர்கள் நாங்கள் முதலமைச்சராக அண்ணா திமுக ஆட்சி பிடிக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று வருபவர்கள் வரட்டும் என சொல்லி முதலமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் நாளைய முதலமைச்சராக உள்ள பழனிச்சாமி அறிவித்துள்ளார் என கூறினார் விரைவில் நடைபெற உள்ளது பாராளுமன்ற தேர்தல் என்பதை மறந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக நினைத்துக்கொண்டு உளறி கொட்டினார்.
தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி பாராட்டி உள்ளார்கள். அதற்குப் பின் ஆட்சி செய்த நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி இருந்தால் சரியான அளவுகோலாக இருந்திருக்கும். இல்லையென்றால் அவரது ஆட்சி சரியில்லை என கூறியிருக்க வேண்டும். அதை பிரதமர் மோடி செய்யவில்லை ஆனால் நான்கரை ஆண்டுகளால ஆட்சியில் எடப்பாடியாரை எப்படி எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி எப்படி எல்லாம் பாராட்டி உள்ளார்கள் என்ற ஆதாரம் உள்ளது. எம்ஜிஆர் ஜெயலலிதா கலவையாக உள்ள எடப்பாடி பழனிச்சாமியையும் பிரதமர் மோடி பாராட்டியிருக்க வேண்டும் அப்படி பாராட்டாமல் இருந்தது ஏன் என்று தெரியவில்லை நமது ஆதங்கம் என்னவென்றால் சிறப்பாக ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி இருக்க வேண்டும் என்பது எண்ணமாகும் என பேசினார். சீனிவாசன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அழைத்துவரப்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.