சரியான நேரத்தில் தவறான முடிவை எடுக்கு அண்ணியார் ! புலம்பும் தொண்டர்கள் !!

0

அதிமுக, தேமுதிக இடையே கூட்டணி தொடர்பாக 2வது சுற்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தலைமை சம்மதித்தது. ஆனால் 8 தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் வேண்டும் என்பதில் கறார் காட்டி வருகிறார் பிரேமலதா, இப்படி கண்டிப்பாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது எனக்குமுற தொடங்கிவிட்டார்கள் அக்கட்சியினர்.

logo right

பிரேமலதா, அதிமுகவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த கட்சியின் தேர்தல் பணிக்குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளார். முதலில் 3 என கூறிய அதிமுக தரப்பில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் தருவதாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி அதுவும் 2025ல் கண்டிப்பாக வேண்டும் என்பதில் கறாராக இருக்கிறாராம் பிரேமலதா.

ஆனாலும், இன்றைக்குள் தங்கள் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தாலும் பாமக பாஜக கூட்டணிக்கு போக வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக இருக்கிறதாம், இந்த நிலையில்,கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று திரும்பியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் நம்பூதிரியாவது நல்ல புத்தி சொல்லி அனுப்பி இருப்பார் என நம்புவோமாக !.

Leave A Reply

Your email address will not be published.