பழனி : உழவாரப்பணிகளை மேற்கொண்ட சிவனடியார்கள்…
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விமர்சியாக கொண்டாட கூடிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா வருகின்ற 18ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அனைத்து சிவனடியார்கள் குழு சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிவனடியார் குழுவினர் 6, 500 பேர் நேற்று ரயில் மூலம் பழனி வந்தடைந்தனர். இன்று காலை பழனி ,அடிவாரம் ,கிரிவல பாதை ,படிப்பாதை, யானை பாதை ,மலைக்கோவில் மேல்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் ,நாளையும் உழவாரப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணி மற்றும் ராஜசேகரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதல் சிவனடியார் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.