பெரம்பலூர் சித்தப்பாவின் ஆசையை நிறைவேற்ற களம் இறங்குகிறார் அருண் நேரு…
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக மற்றும் தோழமைகட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற 23.03.2024 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் முசிறி வாசன் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும்மான மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், இலால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர், குளித்தலை, ஆகிய தொகுதிகளில் உள்ள திமுக மற்றும் தோழமை கட்சிகளின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், உள்ளிட்ட இந்தியா(INDIA) கூட்டணியுள்ள தோழமைகட்சியினர் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட செயலாளர். ந.தியாகராஜன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர். க.வைரமணி,திருச்சி மத்திய மாவட்ட செயலாளர். வீ.ஜெகதீசன், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தப்பா ராமஜெயத்தின் ஆசை பெரம்பலூர் தொகுதி அதில் போட்டியிட ஆர்வமாக இருந்த நிலையில் அது நெப்போலியனுக்கு ஒதுக்கப்பட்டது இப்பொழுது சித்தப்பாவின் கனவை நினைவாக்க களமிறங்குகிறார் அருண் நேரு என்கிறார்கள்.