புஸ்(சி) புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸான ஆனந்த் தகவல்…
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட் டுவருகின்றனர் , முன்பெல்லாம் ஒவ்வொரு தேர்தலின் பொழுது ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பது வழக்கம் அப்படி இல்லாவிட்டாலும் எனது நண்பர் அடைக்கலராஜ் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமாவது ஒரு போஸ்டர் பரபரப்பை கிளப்பும் இதனாலேயே நான்கு முறைட் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் அடைக்கலராஜ் வெற்றி பெற்றார் என்பவர்களும் உண்டு.
இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். வரும் 2026 ஆண்டு தான் எங்கள் இலக்கு என்று வெளிப்படையாக விஜய் தெரிவித்து விட்டாலும் தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்தும் திராவிட கட்சிக்கு யாரும் லோச்சபா தேர்தலில் ஒட்டு போடவேண்டாம் என்று, தமிழக வெற்றிக் கழகம் பெயரில் அறிக்கை ஒன்று கடந்த31ம் தேதி வெளியானது
இதை தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “சமூகவலைதளங்களில் வெளியான அறிக்கை முற்றிலும் போலியானது அந்த அறிக்கை நாங்கள்வெளியிடவில்லை. இதை கட்சியின் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்றார். அதுசரிங்கண்ணா புஸ்ஸி ஆனந்துனு போட்ட உங்க பேர்ல மீண்டும் புஸ்ஸி வந்திருக்கே இதுவாவது உண்மையா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.
#விதுரன் செய்திகளை உடனடியாக வாட்ஸாப் மூலம் அறிய Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KLk5FJo4GW12jznRd5ndVs
Comments are closed, but trackbacks and pingbacks are open.