பங்குனி உத்திர திருவிழாவுக்கு பின் பழனி முருகன் காணிக்கை ரூபாய் 2.92 கோடி !

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விசேஷம், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாக போடுகின்றனர். அவை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது.
அதன்படி கடந்த மாதம் 14ந்தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதையடுத்து பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 18ம்தேதி நடந்தது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோவில் உண்டியல்கள் நிரம்பியதால் அதிலுள்ள காணிக்கை எண்ணி அளவிட முடிவு செய்யப்பட்டது.

logo right

அதன்படி பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.

 


முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து எண்ணி அளவிடப்பட்டது.
இந்த உண்டியல் காணிக்கை மூலம் பணமாக 2 கோடியே 92 லட்சத்து 49,145 கிடைத்தது. மேலும் வெளிநாட்டு கரன்சிகள் 503, தங்க நகைகள் 811 கிராம், வெள்ளி நகைகள் 15 கிலோ 400 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.