பழனி : அரோஹரா ஓட்டமெடுத்த ஓ.பி.எஸ்…

0

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று வருகை புரிந்தார் ஓ. பன்னீர்செல்வம். மலையடி வாரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்தவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்று மரியாதை செலுத்தினர்.

logo right

நீதிமன்றம் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கொடி, லெட்டர் பேட் , சின்னத்தை பயன்படுத்த நிரந்தர தடை விதித்துள்ளது குறித்து கேள்விக்கு செய்தியாளர்களை தவிர்த்து விட்டு ஓ. பன்னீர்செல்வம் நகர்ந்து சென்றார். மாலை மலைக்கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து தங்க ரதம் இழுத்து வழிபட ஏற்பாடு செய்துள்ளனர்.போன முறை தரிசனம் செய்ய வந்த பொழுது ஆண்டிக்கோலத்தில் பார்த்திருப்பார் இந்தமுறை ராஜ அலங்காரத்தில் பார்க்க வந்திருப்பார் போல என கிண்டலுடன் நகர்ந்தார் கேள்வி கேட்ட நிருபர்.

Leave A Reply

Your email address will not be published.