பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்: வழங்குவாரா நிர்மலா சீதாராமன்…?

0

பியூஷ் கோயல் 2019 இடைக்கால பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை வரி விதிக்கக்கூடிய ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர் வரி செலுத்துவோர் வருமான வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்தார். ரூபாய் 6.50 லட்சம் வரை மொத்த வருமானம் உள்ளவர்கள் வருங்கால வைப்பு நிதி, குறிப்பிட்ட சேமிப்பு மற்றும் காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. ரூபாய் 2 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி, வட்டி போன்ற கூடுதல் விலக்குகள். கல்விக் கடன்கள், தேசிய ஓய்வூதியத் திட்ட பங்களிப்புகள், மருத்துவக் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவச் செலவுகள் போன்றவையும் 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தார்.

logo right

2023 பட்ஜெட் புதிய வருமான வரி முறையை இயல்புநிலை விருப்பமாக மாற்றப்பட்டது. புதிய வருமான வரியின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு ரூபாய் 2.5 லட்சத்தில் இருந்து ரூபாய் 3 லட்சமாக உயர்த்தப்பட்டது. புதிய வரி முறையிலும் வருமான வரி அடுக்குகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய வரி முறையின் கீழ் பிரிவு 87Aன் கீழ் தள்ளுபடியானது தற்போதைய வருமானம் ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய் 7 லட்சமாக உயர்த்தப்பட்டது. எனவே 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள புதிய வருமான வரி முறையை தேர்வு செய்பவர்கள் எந்த வரியும் செலுத்த மாட்டார்கள்.

பட்ஜெட் 2023 புதிய வருமான வரியின் கீழ் வரி அடுக்குகளையும் மாற்றியமைத்தது. 3 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. 3 லட்சத்துக்கு மேல் மற்றும் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. ரூபாய் 6 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூபாய் 9 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. 12 லட்சம் மற்றும் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. 15 லட்சத்துக்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவிகித வருமான வரி விதிக்கப்படுகிறது. இம்முறை வரி விகிதத்தில் மாற்றம் வேண்டும் என்பதும், 620 நாட்களாக மாற்றப்படாமல் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தால் நடத்தர மக்களுக்கு நன்மை பயக்கும் என்கிறார்கள் மக்கள். மக்களின் ஆசையை நிறைவேற்றுவாரா நிர்மலா சீத்தாராமன் என்பது நாளை தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் தெரியவரும்.

Leave A Reply

Your email address will not be published.