’சின்னம்’ கிடைக்குமா சீமானுக்கு ! தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் !!
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி அங்கீகரிப்பு பெறாத அரசியல் கட்சி இதனால், தேர்தல் நேரத்தில் பொது சின்னங்கள் பட்டிய லில் இருந்து ஒருசின்னம் ஒதுக்கப்படும். கடந்த சில தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் இந்த கட்சி போட்டியிட்டு வந்தது.
விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னம் கோரி, தேர்தல் கமிஷனில் நாம் தமிழர் கட்சி விண்ணப்பித்தது. ஏற்கனவே இந்த சின்னத்தைக் கேட்டு வேறு ஒரு கட்சி விண்ணப்பித்ததால், அந்த கட்சிக்கு அதை ஒதுக்கப்பட்டு விட்டது.வேறு சின்னத்தை தேர்வு செய்ய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.
இதை எதிர்த்து, டில்லி உயர்நீதி மன்றத்தை நாடியது நாம் தமிழர் கட்சி விசாரணை நடத்திய உயர்நீதி மன்றம் அதன் தீர்ப்பில், கரும்பு விவசாயி சின்னத்தை முதலில் கோரிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது சரிதான். 2019 முதல் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டதால், அதில் தங்களுக்கு முன்னுரிமை இருப்பதாக நாம் தமிழர் கட்சி வாதிடுவதை ஏற்கமுடியாது. அதை ஏற்றால், பொதுசின்னம் என்ற வரையறையே தவறாகி விடும். பொதுசின்னங்களை, எந்த ஒரு கட்சியும் உரிமை கொண்டாட முடியாது என்று குறிப்பிட்ட உயர்நீதி மன்றம், நாம் தமிழர் கட்சி மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் நாம் தமி ழர் கட்சி அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த அப்பிலை. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நீதிபதிகள் ஜே.பி.பாதிவாலா, மனோஜ் மிஸ்ரா கொண்ட பெஞ்ச் நேற்று பரிசீலித்தது. இந்த மனு, ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பின் விசாரிக்கப்படும். தேர்தல் கமிஷன் பதிலலிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.