வேலூர் மருத்துவமனையில் இருந்து மீண்டும் அப்பலோவில் முக. அழகிரி மகன் !
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அழகிரியின் மகன் துரை தயாநிதி உயர் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அழகிரியின் மகன் துரை தயாநிதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை உறுதிசெய்ததோடு, உடனடியாக சிகிச்சையைத் தொடங்கியிருக்கின்றனர்.
அன்றுமுதல் அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உயர் ரக மருத்துவச் சிகிச்சைக்கு நேற்று வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர். இந்த நிலையில் தற்போது இன்று காலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.