பாசமுள்ள வேந்தரே ! பந்தா காட்டாத பாரிவள்ளலே !!
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பூலாம்பாடி கிராமத்தில் ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார். தொடர்ந்து ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும் எனவும், ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.
மேலும் கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார். இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர்-RT இராமச்சந்திரன் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், த.ம.மு .க வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் புரட்சி முத்தரையர் முன்னேற்றசங்கம ஐஜேகே மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டபலர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.
அரும்பாவூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தார், தன்னை தேர்ந்தெடுத்தால் யாரும் முடிக்காத 50 ஆண்டு கால கனவு திட்டமான ரயில்வே திட்டம் கொண்டுவரப்படும் என உறுதி அளித்தார் பொதுமக்கள் நல்லநாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என டாக்டர் பாரி வேந்தர் கேட்டுக்கொண்டார். கிருஷ்ணாபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள் என வலியுறுத்தினர். கிருஷ்ணாபுரத்தில் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.
பாரிவேந்தர் அளிப்பது வாக்குறுதி அல்ல வாழ்க்கைக்கு உறுதி கல்வி, மருத்துவம் என இரண்டையும் தனது கண்களாக நினைப்பவர் டாக்டர் பாரிவேந்தர். காரணம் பல கல்வி நிறுவனங்களை தொடங்கிய வெற்றி கண்டவர். அதன் பயனாக பல மாணவர்களை வாழ்க்கையில் ஏற்றம் பெற செய்தவர் பல மருத்துவமனைகளை நிறுவி பலர் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயங்களை தனி நபராக செய்து செய்து வருபவர். கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி எம்.பியாக இருந்து மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார். ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கொடுக்கணும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, தனது வாழ்கையை மாற்றியவர். தான் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கான வாரி வழங்கி வருகிறார். இன்னும் வழங்க இருக்கிறார். பெரம்பலூர் மக்களின் நீண்ட கால கனவு திட்டமான அரியலூர் – பெரம்பலூர்-துறையூர்- நாமக்கல் ரயில் திட்டத்திற்கு அனுமதி பெற்று செயற்கை கோள் ஆய்வை துவங்கிவைத்தவர்.
டாக்டர் பாரிவேந்தர். உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர்,பெரிய வடகரை, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு 1 கோடி மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி மக்களின் ஆரோக்கியம் காத்த அற்புதமான மனிதர் நமது டாக்டர் பாரிவேந்தர்.
சிறுகனூரில் புதிய மேம்பாலம் இருங்களூரில் புதிய மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளார். கடந்த 5ஆண்டுகளில் இந்தியா அளவில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நற்பெயரை ஈட்டியுள்ளார். நாளைய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வையோடு மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொடக்க கல்வி முதல் பலதரப்பட்ட மேற்கல்வி வரை 1200 மாணவர்களுக்கு வழங்கிய தனி நபராக இருந்து சாதனை புரிந்தவர். அழியாத கல்வி செல்வத்தை வழங்கி பல மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றி குடும்பங்களின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வருகிறார். கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் சிகிச்சை பெற தான் நடத்தும் மருத்துவ மனைகள் மூலம் உதவியவர். இந்த முறையும் தான் ஒரு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். குடும்பத்திலுள்ள தாய், தந்தை தான் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் வாழ்வில் உச்சம் பெற வேண்டும் என நினைப்பவர்கள், ஆனால் எம்பியாக இருக்கும் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூர் உள்ள மக்களை அனைவரையும் தனது குடும்பமாக தான் பார்க்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்வி உதவியை வழங்கி வருகிறார்.
பாரிவேந்தர் வர்றாரு படிக்க வைக்க போறாரு என பாடல் ஒலிக்க தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருவதால் பயன்பெற்ற பயன் பெறப்போகும் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.