அரங்கனின் அருள் கிட்டுமா கருப்பையாவுக்கு !
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிடும் கருப்பையா ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் ஆலயத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை தொடங்கினார் .
தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிடும் கருப்பையா நேற்று மாலை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் ரெங்கநாதரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் – வளர்மதி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். ரெங்கா ரெங்கா கோபுரத்தின் முன்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கிய பின்னர் தை தேரோட்ட வீதி,சித்திர வீதி,அடையவலஞ்சான் போன்ற பல்வேறு பகுதிகளில் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக பேசிய வேட்பாளர் கருப்பையா… எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக.. ரெங்கநாதரையும் மக்களையும் சந்திக்க கூடியவர் நான் அல்ல இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.