அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது….

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு இன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சம்பந்த விநாயகர் கோவிலில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

logo right

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம், குறிப்பாக சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா வெகுவிமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படும், அந்தவகையில் நாளை தொடங்கி 23ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு இன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் திருக்கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்காலுக்கு பால் பழம் தேன் தயிர் சந்தனம் விபூதி பன்னீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு விநாயகருக்கு மகா தீபாராதனை நடைபெற்று பின்னர் பந்தகாலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நாளை முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அருள்மிகு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து பின்னர் மகிழ மரம் அருகே உள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ போடும் விழா நடைபெற உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.