காட்பாடியில் காலியான இருக்கைகள்…

காட்பாடியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு அமைச்சர் துரைமுருகன் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தின் போது உட்கார ஆட்கள் இல்லாமல் காலியாக இருந்தன நாற்காலிகள்.  ஒன்றாவது வார்டு என்பதற்கு ஒன்னாம் நம்பர் என்று அமைச்சர் சொன்னது பிரச்சார மேடையில் பரப்பரப்பு காணப்பட்டது.

காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக்குப்பம்,செங்குட்டை, அக்ராவரம்,தாராபடவேடு, பழைய காட்பாடி உள்ளிட்ட இடங்களில் இந்தியா கூட்டணி திமுகவில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது அவர் எந்த வார்டில் பேசுவது என்று கூட தெரியாமல் நிர்வாகிகளிடம் கேட்டு சொல்வதையும் சரியாக சொல்லாததால் பிரச்சார மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

logo right

 

அவர் ஒன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் எனக் கூறுவதற்கு பதிலாக ஒன்னாம் நம்பர் எனக் கூறினார் அருகில் இருத திமுக நிர்வாகிகள் அவர் காதில் ஒன்றாவது வார்டு என எடுத்துக் கொடுக்க உடனே அதை சுதாரித்துக் கொண்டு அமைச்சர் துரைமுருகன், அவர் எதிலும் ஒன்னா நம்பர் தான் எனக்கூறி சிரித்த படியே சமாளித்து பேசி நிகழ்ச்சியை முடித்தார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சொந்த தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமர்வதற்கு இருக்கைகள் போடப்படும் அந்த இருக்கைகளில் ஆட்கள் அமர ஆளில்லாமல் காலியாக காட்சியளித்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.