CCAக்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட முயற்சி. காவல் துறையால் தடுத்து நிறுத்தம்…
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ரத்து செய்ய கோரியும் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அவர்கள் ரயில் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஈழத் தமிழர்களையும், இந்திய வம்சாவளி இஸ்லாமியர்களையும், நேபாள கிறிஸ்தவர்களையும் CAAல் உள்ளடக்க வேண்டும். அத்தகைய திருத்தம் செய்த பின்னரே CAA வை அமல்படுத்த வேண்டும். இல்லையேல் அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் , எஸ்டிபிஐ உள்ளிட்ட தோழமை கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.