ஆரணி அருகே அடுத்தடுத்து 5 அரிசி ஆலைகளில் வருமானவரி துறையினர் சோதனை…

ஆரணி அருகே ஆறு மணிநேரம் சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததால் பரபரப்பு. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூரில் சுமார் 150க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரிசி ஆலைகளில் அரசியல்வாதிகள் பணம் மற்றும் ஆவணங்கள் பதுக்கி உள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் சென்னை வருமானவரி துறை இணை இயக்குநர் தலைமையில் சென்னை திருவண்ணாமலை  மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 24 அதிகாரிகள் 6 கார்களில் வந்து விரைந்து களம்பூரில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

 

logo right

மேலும் களம்பூர் ஆரணி திருவண்ணாமலை சாலையில் உள்ள எஸ்.பி.எஸ் அரிசி ஆலையில் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து களம்பூர் சந்தவாசல் சாலையில் உள்ள ஸ்ரீபாலாஜி மாடர்ன் அரிசி ஆலை உள்ளிட்ட 5 அரிசி ஆலைகளில் வருமான வரி அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமானவரி துறையினரின் வட்டாரங்கள் தெரிவித்தனர். ஆரணி அருகே களம்பூரில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரிசி ஆலைகளில் வருமானவரி துறை மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் திமுக அதிமுக பாமக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்க அரிசி ஆலைகளில் பதுக்கல் வைக்கபட்டுள்ளதா என சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.