தமயனுக்காக களமிறங்கிய தந்தை !

திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் அருண் நேருவிற்கு ஆதரவாக அமைச்சர் கே என் நேரு பிரச்சாரம் செய்த ஆதரவு திரட்டினார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் அருண் நேரு பிரச்சார நிகழ்ச்சி இன்று தா.பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்றது.
தா.பேட்டை ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் இன்று காலை தொடங்கிய சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து பேசினார்.
அப்போது கே.என். நேரு பேசியதாவது… தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புளியஞ்சோலையில் இருந்து மகாதேவிக்கு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என அப்போதைய அதிமுக அமைச்சர் அண்ணாவி கூறியிருந்தார். அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
புளியஞ்சோலை கால்வாய் திட்டம் நிறைவேற்றிக் கொடுத்து தா.பேட்டை ஒன்றியம்விவசாயத்தில் வளம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் புதிய பேருந்து நிலையங்கள், மார்க்கெட், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனை, உள்ளிட்ட எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய பாலங்கள், சாலைகள் அமைத்து தரப்பட்டுள்ளது.

logo right

தமிழக முதல்வர் கூறியது போல திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான காடுவெட்டி தியாகராஜன் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவர் இப்பகுதி மக்களுக்காக கேட்கும் கோரிக்கைகளை எல்லாம் தமிழக அரசு செய்து தருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக உங்களோடு மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொண்டு முழு நேரமாக செயல்பட்டு வருகிறேன்.எட்டு முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன்.தொடர்ந்து என்றும் உங்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறோம். என்றும் உங்கள் சேவகனாக இருப்போம்.
மத்திய அரசின் திட்டங்களையும், நிதிகளையும் முழுமையாக நமது பகுதிக்கு பெறுவதற்கு நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் நமது திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.