அவர் வருவாரா… அவர் வருவாரா ?
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழ்நாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேனி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரோஷோ நிகழ்ச்சி பிரச்சாரம் செய்வதற்காக நாளை மாலை தேனி மாவட்டத்திற்கு வருகை தருவதாக கூறப்பட்டிருந்தது இதற்காக தேனி வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான ஹெலிபேட் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் தேனி ரயில்வே கேட் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பங்களாமேடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரும்புக் கம்பிகளால் சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொண்டர்கள் அதன் பின் நின்று ரோட்ஷோ நிகழ்ச்சியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமித் ஷாவின் கான்வாய் வாகனம் செல்வது போன்று போலீசாரின் ஒத்திகையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் உடல்நிலை காரணமாக தமிழகம் வரும் அமித் ஷா பயணம் ரத்து செய்யப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது, மேலும் அமித்ஷாவின் அடுத்த கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.