திருச்சி : நெடுஞ்சாலையில் ஆம்னி சொகுசு பேருந்து லாரி மீது மோதி விபத்து – 2 பேர் பலி…

திருச்சி பால் பண்ணை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி சொகுசு பேருந்து லாரி மீது மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி 34 நபர்களுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து முன்னே தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி பின்புறம் மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. பேருந்து ஓட்டுனர் மற்றும் மூதாட்டி இருவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

logo right


லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த விபத்து காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.