பழனி : பறவைக்காவடி பலே பலே…

0

பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்று அடுத்த மாதம் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது

logo right

இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 47வது ஆண்டாக பழனிக்கு மயில்காவடி, பால்காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்திருந்தனர். இவர்கள் சண்முக நதியில் புனித நீராடி, உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர்.

உடல் முழுவதும் அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடியே வந்த பக்தர்கள் கிரிவலம் சுற்றி அருள்மிகு பாதவிநாயகர் கோவிலில் நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர் பின்னர் அருள்மிகு தண்டபாணியை மனதார வணங்கி மகிழ்ந்தனர், உடல் முழுவதும் அலகு குத்தி பக்தர்கள் வலம் வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

Leave A Reply

Your email address will not be published.