திண்டுக்கல் : நெல்லை முபாரக் நிலக்கோட்டையில் கிராமத்திற்குள் நுழைய கடும் எதிர்ப்பு…

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக் நிலக்கோட்டையில் கிராமத்திற்குள் நுழைய கடும் எதிர்ப்பு ஊர் முழுவதும் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பு காட்டி வரும் இஸ்லாமியர்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முகம்மது முபாரக் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த போது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கோடாங்கிநாயக்கன்பட்டி பள்ளிவாசலில் கூடிய இஸ்லாமியர்கள் எஸ் டி பி ஐ கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக் கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டு நெல்லை முபாரக் தேர்தல் பிரச்சாரம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

logo right

இது பற்றி கூறும் ஜமாத் நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் பாதுகாவலர் என சொல்லிக்கொண்டு வாக்கு சேகரிக்கும் நெல்லை முபாரக் கோடாங்கி நாயக்கன்பட்டி இஸ்லாமியர்கள் இடையே ஏற்பட்ட பிரட்சனைகளில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும் அதில் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் இஸ்லாமியர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் நெல்லை முபாரக் ஊருக்குள் வந்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஊர் முழுவதும் கருப்புக்கொடி கட்டி இருப்பதாக கூறினார்கள்.

 


நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முகமது முபாரக் பிரச்சாரம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்களே கருப்புக் கொடி கட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.