வேட்பு மனுவை மறந்த தங்க தமிழ்செல்வன் !

தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக திறந்த வேனில் நின்றபடியே தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வருகை தந்தார் அவருடன் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, மூர்த்தி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் ஊர்வலமாக வருகை தந்தனர்.

logo right

பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் முன்பாக பேரணியாக வந்த திமுகவினரை நிறுத்தப்பட்டு திமுகவேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அமைச்சர்கள் வந்த 2 வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் வேட்பு மனு தாக்கலுடன் புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் கேட்கவே தனது வேட்பு மனு குறித்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு நினைவு வந்தது, தன்னுடைய காரில் வேட்பு மனு தாக்கல் வைத்திருந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் மாற்று காரில் ஏறி வந்ததால் அவர் வந்த வாகனம் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.

இரண்டு கார்களை மட்டும் போலீசார் அனுமதித்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் காரை அனுமதிக்கவில்லை பின்னர் உடனடியாக தனது உதவியாளரிடம் தனது காரில் உள்ள சென்று வேட்பு மனுவை எடுத்து வர கூறினார், அமைச்சர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பு மனுக்காக காத்திருந்த நிலையில் தனது உதவியாளர்கள் இருசக்கர வாகனத்தில் வேட்பு மனுவை எடுத்து வந்தனர் எடுத்து வந்தனர் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.