தேனி : கொட்டும் மழையில் டிடிவி.தினகரனை பேசுமாறு வழி மறித்த கிராம மக்கள்…
காவல் நிலையத்தில் தங்கள் கிராமத்தின் பெயரை கரும்புள்ளி கிராமமாக வைத்துள்ளதை நீக்க கோரியும், சோத்துப்பாறை அணை கூட்டு குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கையை வாக்குறுதிகளாக தருமாறு கூறி பேச வைத்த கிராம மக்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெய்வேந்திரபுரம், எ.புதுப்பட்டி, தேவதானப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, சருத்துபட்டி லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார துவக்கத்தின் முதல் பகுதியான தெய்வேந்திரபுரம் பகுதிக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது மழை பெய்யத் துவங்கியது. அந்த கொட்டும் மழையிலும் பிரச்சாரத்திற்காக காத்திருந்த அப்பகுதி பொதுமக்கள் குக்கர்களை தழையில் ஏந்தியவாறு வழிமறித்து தங்களிடம் பேசி பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு கூறினர். இதனைத் தொடர்ந்து கொட்டும் மலையில் நின்றிருந்த பொது மக்களை கோடை மலையில் நனைய வேண்டாம் எனக்கூறினர்.
இருந்த போதும் பொதுமக்கள் நனைந்தவாறு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை கோரிக்கையாக துண்டு சீட்டில் எழுதி வைத்திருந்த காகிதத்தை டிடிவி.தினகரனிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் பிரச்சனையான சோத்துப்பாறை அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்குதல், தங்கள் கிராமத்தின் பெயரை பெரியகுளம் காவல் நிலையத்தில் கரும்புள்ளி கிராமமாக பதிவு செய்துள்ளதை நீக்க வேண்டும், தங்கள் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சுற்றுச்சூழல் எழுப்பி கோவில் கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை எழுதிக் கொடுத்ததை நான் ஜெயித்து வந்தவுடன் இதற்கான நடவடிக்கையை எடுப்பேன் எனக்கூறி கொட்டும் மழையிலும் வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதேபோன்று எ.புதுப்பட்டி கிராமத்திலும் கொட்டும் மழையில் பரப்புரை மேற்கொண்டார்
Comments are closed, but trackbacks and pingbacks are open.