இன்றே கடைசி : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க !!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், வனக்காவலர் உள்ளிட்ட 32 வகையான பணிகளுக்கு 6 ஆயிரத்து 244 பேரை தேர்வு செய்வதற்கு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த 30ம் தேதி வெளியிட்டது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்று (28ம் தேதி) கடைசி நாள். விண்ணப்பங்களை திருத்த மார்ச் 4 முதல் மார்ச் 6ம் தேதிவரை 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு ஜூன் 9ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணிவரை நடக்கிறது. இந்த முறை குரூப் 4 தேர்வில் வனக் காப்பாளர், டிரைவிங் லைசன்சுடன் கூடிய வனக் காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு மட்டும் எழுத்துத்தேர்வில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள், உடல்தகுதித் தேர்வு மற்றும் நடை சோதனைக்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை குரூப் 4 தேர்வு 2022ம் ஆண்டு நடை பெற்றது. இதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த முறை அதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.